கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதான பாதையை விடுவிக்க டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்கான பிரதான பாதையை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்(Douglas Devananda) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், பாடசாலையின் மைதானத்திற்கான பிரதான பாதையில் அமைந்துள்ள இராணுவ முகாம், மாணவர்களின் மைதானச் செயற்பாடுகளுக்கு அசௌகரியமாக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
தொடர் நடவடிக்கை
குறித்த கோரிக்கை தொடர்பாக அமைச்சர் முன்னெடுத்த தொடர் நடவடிக்கையினால், இராணுவ முகாமின் ஒரு பகுதியை விடுவித்து மைதானத்திற்கான பாதையை வழங்குவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தினரால் விடுவிக்கப்படவுள்ள பகுதியை இன்று பார்வையிட்டச் சென்ற அமைச்சரை வரவேற்ற, குறித்த பகுதிக்கு பொறுப்பான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெவர்த்தன, சம்மந்தப்பட்ட பகுதிகளை அமைச்சருக்கு காண்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
