மகிந்த ராஜபக்சவின் பதவி பறிக்கப்பட்ட பின்னணியில் செயற்பட்ட முக்கிய புள்ளிகள்
மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவியை பறிக்கப்பட்டதற்கும்,இந்திய உளவுத்துறையின் நலன்களால் நாட்டின் ஆட்சியை சீர்குலைப்பதற்குமான பின்னணியில் பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்துள்ளதாக முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (FSP) பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் பசில் ராஜபக்ச இரகசியமாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க இந்திய றோ மற்றும் அமெரிக்க சிஐஏ அமைப்பு செயற்பாட்டு வந்ததாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளை மீறி எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தி ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri