தலைமறைவாக இருக்கும் ஜோன்ஸ்டனை தேடும் 2 பொலிஸ் குழுக்கள்
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய, இரண்டு விசேட பொலிஸ் குழுக்களை குற்ற விசாரணை பிரிவினர் நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு

சந்தேகநபர்கள் எதிர்வரும் சில தினங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் 2348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,037 பேர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்முறையை தூண்டிய ஜோன்ஸ்டன்

கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆக்ரோஷமான முறையில் பேசி, தொண்டர்களை கிளர்தெழ செய்ததாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri