ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களிடம் மாவை சேனாதிராஜா முக்கிய கோரிக்கை!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா பொதுச் செயலாளர், ஐநா மனித உரிமைகள் ஆணையர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்டவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாவை சேனாதிராஜா, இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
UN documentation of Tamils genocide in Sri Lanka on 2009. Please continue the support for us @antonioguterres @mbachelet @UNHumanRights @JoeBiden @BorisJohnson @JustinTrudeau @AngelaMerkel_DE @BarackObama @narendramodi @KamalaHarris https://t.co/1YbautGWfZ
— Mavai Senathirajah (@Mavai_S) February 1, 2021




