சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைகள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முக்கிய குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் விசாரணைகள் முடிவடைய குறிப்பிடத்தக்க கால அவகாசம் தேவை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய ஆதாரங்களை மறைத்தோ அழித்தோ உள்ள நபர்களை அடையாளம் காண குற்றப்புலனாய்வு துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துளள்து.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை மிகுந்த சிக்கலான தன்மை கொண்டவை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்களை மறைத்தோ அல்லது அழித்தோ உள்ளவர்களை கண்டறிவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த விசாரணைகள் எந்த தடையுமின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை நிறைவு செய்ய சில காலம் பிடிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் மா அதிபர் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைகளுக்கு பாதகம் ஏற்படக்கூடும் என்பதால் தற்போதைய நிலையில் சில தகவல்களை வெளியிட முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தசாப்தங்களில் நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய கொலைகள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்கு இதுவரை நீதியளிக்கப்படாத நிலை காணப்படுவதாகவும், அதனால் கீழ்க்கண்ட முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
• ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் 2015 ஆம் ஆண்டு பத்திரப்பத்திரிகை ஏலம் (Bond Scam) தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
• 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற தினேஷ் ஷாஃப்டர் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படாத நிலையில், அந்த விசாரணையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
• 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரின் காணாமற்போன சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
• 2005 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் (தரகி) கொலை வழக்கை மீண்டும் திறக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
• 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமற்போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான விசாரணைகளையும் விரைவுபடுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளும் சில விசாரணைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளதனால், அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு, அமைச்சர் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan