இலங்கை மக்களுக்கு மற்றுமொரு சிக்கல்! நள்ளிரவு முதல் சேவைகளை நிறுத்திய முக்கிய சங்கம்
இன்று நண்பகல் 12 மணி முதல் எரிபொருள் முன்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய தினம் எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது எனவும், அதன்படி திங்கட்கிழமை வரை எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது எனவும் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட வாகனங்களைத் தவிர எந்தவொரு பௌசர்களும் செல்லாது எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வருவது தாமதமாகும்
இதேவேளை, திட்டமிடப்பட்ட எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வருவது தாமதமாகும் எனவும், அவை இலங்கைக்கு வருவதற்கான திகதியை உறுதிப்படுத்த முடியாது எனவும், எனவே எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
