கோர விபத்தில் சிக்கி பலியான மனைவி: துக்கம் தாங்காமல் கணவருக்கு நேர்ந்த துயரம்
மஹியங்கனை பகுதியில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வந்த ஒருவர் மனைவி உயிரிழந்த ஏழாவது நாள் பிரார்த்தனையின் போது உயிரிழந்துள்ளார்.
ஓய்வுபெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். தர்மசேன (63) என்பவரே நேற்று (5) உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
விபத்து தொடர்பில் அதிகாரிகள் விசாரணை
இந்த விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான ஓய்வுபெற்ற உப பொலிஸ் பரிசோதகரின் மனைவி ரஞ்சலி பிரணீதா (52) கடந்த 1 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
குறித்த விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற உப பொலிஸ் பரிசோதகர் மனைவியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள முடியாத துக்கத்தில் இருந்த நிலையில், மனைவி உயிரிழந்து ஏழாவது நாள் உயிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



