விஜேராம இல்லத்தில் திருட்டுப்பொருட்கள்! உண்மைகளை மூடி மறைக்க மகிந்த வகுத்த திட்டம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பல மதிப்புமிக்க பொருட்களை திருடி விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எந்தவொரு தனிப்பட்ட உடைமைகளும் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக மகிந்த ராஜபக்ச வசித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அரசாங்கப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றில் உள்ள திருட்டுப்பெருட்களை அப்பறப்படுத்துவதே அவற்றின் பின்னால் உள்ள நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
தனிப்பட்ட நோக்கம்
இவை மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட நோக்கத்துடன் செய்யப்பட்டது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து தொடர்புடைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபகசவும் அந்த வீடுகளில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
