இரகசிய வாக்கெடுப்பு முறை: ராஜதந்திரக் குழு சபாநாயகரோடு சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான பிரச்சினைகளை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர் கேட்டறிந்துள்ளனர்.
இது தொடர்பில் கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பை சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
| ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்! மைத்திரி, மகிந்தவும் பங்கேற்பு |

வாக்கெடுப்பு முறை
இந்த செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என அபேவர்தன தூதுக்குழுவிடம் உறுதியளித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தேர்தல் நடத்தும் அதிகாரி என்ற அடிப்படையில் செயல்முறை தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இந்த தூதுக்குழுவில் அமெரிக்க தூதர் ஜூலி சுங், ஐக்கிய இராட்சியத்தின் சாரா ஹல்டன், கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், அவுஸ்திரேலியாவின் டேவிட் ஹோலி, நியூசிலாந்தின் மைக்கல் எப்பெல்டன், மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் டென்னிஸ் சாய்பி ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.