மஹிந்தவின் ஆட்சிக்கு பின்னர் கேள்விக்குறியான பொருளாதாரம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்கு பின்னர் தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம் கோவிட் காரணமாக பாதாளத்தில் சென்று விட்டது என சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் பின்னர் தான் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மத்தல விமான நிலையம் முதல், அம்பாந்தோட்டை துறைமுகம் வரை திட்டமிடப்படாத நிகழ்ச்சி நிரலின் கீழ் சென்றுவிட்டது. இப்படி தான் ஆட்சியாளர்கள் செய்துவிட்டு செல்கின்றனர்.
இப்போது மின்சாரம் , எரிபொருள் எல்லாமே பிரச்சினையாக உள்ளது . பொருட்களின் விலையை வியாபாரிகளே நிர்ணயிக்கின்றனர். இதற்கு நிதி அமைச்சரே பதில் கூற வேண்டும்.
அடுத்த தேர்தல் தான் இதற்கு பதில் கூற வேண்டும். பசில் ராஜபக்ச
பொருளாதார கொள்கையை மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.