முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மகிந்தானந்த அளுத்கமகே இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பிடியாணை
இதற்கு முன்னதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி மகிந்தானந்த அளுத்கமகே,நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், அதனை நிராகரித்த நீதிமன்றம் இவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
