கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று காலை வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
7 கோடி 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் 21 வயது தாய்லாந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் கைது
இளைஞன் தாய்லாந்தில் போதைப்பொருள் பொதியை பெற்று, மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்று, அங்கிருந்து இன்று அதிகாலை 12.00 மணிக்கு மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன் மூலம் சுங்க அதிகாரியின் கவனத்தைத் திசை திருப்ப அவர் முயற்சித்துள்ளார்.
அவரது பொதிகளில் இனிப்புகள் அடங்கிய பல பக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோகிராம் 910 கிராம் குஷ் போதைப்பொருளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பின்னர், இந்த பயணியையும் அவர் கொண்டு வந்த போதைப்பொருளையும் கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
