ஜேவிபி பெயரிட்ட, சீன கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்தவேண்டிய அமைச்சர்கள் இருவர்!
சேதனப் பசளைகளை ஏற்றி வந்த சீன கப்பலுக்கான கொடுப்பனவை, இரண்டு விவசாய அமைச்சர்களும் இரண்டு பசளை நிறுவனங்களின் தலைவர்களும் செலுத்தவேண்டும் என்று ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கோரியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்த கொடுப்பனவுகளுக்காக பொது மக்களின் பணத்தை பயன்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்
ஏனெனில் இந்த கொடுப்பனவில் பொதுமக்கள் எவ்விதத்திலும் தொடர்புகொண்டிருக்கவில்லை என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எனவே அமைச்சர்களான மஹிந்தாநந்த அலுத்கமகே, ராஜாங்க அமைச்சர் சஸீந்திர ராஜபக்ச மற்றும் இலங்கை பசளைகள் நிறுவனம் மற்றும் கொழும்பு கொமர்சல் பசளை நிறுவன தலைவர்கள் இந்த கொடுப்பனவை செலுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பசளைகளுக்காக கடன் கடிதம் திறக்கப்படுவதற்கு முன்னர், அதன் மாதிரிகள் சோதனையிடப்பட்டிருக்கவேண்டும்.
எனவே இந்த கடன் கடிதத்தை யார் திறந்தது என்றும் யார் அதற்கு பணிப்புரை விடுத்தது என்பதும் கண்டறியப்படவேண்டும் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்.





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
