மகிந்தானந்தவை கைது செய்ய உத்தரவு..
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்யுமாறு நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே,நேற்று முன்தினம் (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
பிடியாணை
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான விடயத்தில் கைது செய்யப்படுவதற்கு முன்னரே அவர் இவ்வாறு மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

அதன்படி, இந்த கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று(16) மகிந்தானந்த அளுத்கமவை கைது செய்யுமாறு நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan