13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லாத ஒன்று: மகிந்த ராஜபக்ச
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் (24.02.2023) செய்தியாளர்களை மகிந்த மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
இதன்போது அவரிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த மகிந்த, 13ஆவது திருத்தச் சட்டம் ஒரு சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதே கருத்தை கொண்டிருக்கவில்லை, 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
தேர்தலை நடத்தாமல் இருக்க கூடாது நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்
பணம் இல்லை எனக் கூறி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது என்ற ஜனாதிபதியின் கருத்து தவறு. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கின்றோம் என்றும் மகிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.




