ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவை மக்களுக்கு முதலில் காட்டியவர் மகிந்தவே! - சாணக்கியன்
ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழு இருக்கின்றது என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் காட்டியவர் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மனித உரிமை மீறப்படுவது குறித்து முதலில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்சவே சென்றார்.
எனினும் தற்போது ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு எதிரானது என்ற நிலைப்பாடு நாட்டு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இலங்கையின் பல அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்பது சாதாரணமானது.
எனினும் நாட்டில் வாழும் சாதாரண குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் கல்வி கற்கவும் அங்கு வாழவும் விரும்புகின்றனர்.
அந்த நாடுகளில் மனித உரிமைகள் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுவதே இதற்கு பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam