யாழ் வரமாட்டார் மகிந்த! கொறோனா காரணமாம்!
சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 31ம் திகதி யாழ் குடாவுக்கு விஜயம் மேற்கொள்ள இருந்த நிலையில், அந்த விஜயத்தை பிரதமர் அலுவலகம் ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, காங்கேசன்துறையில் விடுதி திறப்பு வைபவம், வேலணையில் பல்பரிமாண நகரத் திட்டத்திற்குள் வேலணை நகரை பல்பரிமாண நகரமாக்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், யாழ், நாவற்குழி பகுதியில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 182 வீடுகளுக்கான உரிமப் பத்திரங்களை வழங்கிவைப்பதற்காகவும், சில வீட்டுத் திட்ட வீடுகளுக்கான அடிக்கல்லை நடுவதற்காகவும் எதிர்வரும் ஜுலை 31ம் திகதி மற்றும் ஓகஸ்ட் 1ம் திகதி பிரதமர் யாழ் குடா வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் பிரதமரின் அந்தப் பயணம் தற்பொழுது ரத்தாகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்குடாவில் கொறோனா தொற்றின் வீரியம் அதிகரித்ததே காரணம் என்று கூறப்படுகின்றது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri