ஆபத்தான எந்தவொரு சட்டத்தையும் மொட்டு ஆதரிக்கமாட்டாது - மகிந்த திட்டவட்டம்
மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகியவற்றை அரசு கொண்டுவரும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது பொதுஜன பெரமுன ஆட்சி சர்வாதிகார ஆட்சி இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவர்.
மொட்டு ஆட்சி சர்வாதிகாரமுடையது அல்ல
கட்சியுடன் பேசித்தான் கட்சி தொடர்பான நிலைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். எனினும், இதுபோன்ற மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கமாட்டாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெறும் கட்சி அல்ல. மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அரசும் கூட.
மொட்டு ஆட்சி சர்வாதிகார அரசு இல்லை என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
மக்கள் பக்கம் நின்று நாட்டின் நலன் கருதியே நாம் முடிவுகளை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri