அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஓய்வுபெற மாட்டேன்
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நேரம் வரும்போது மட்டுமே ஓய்வு பெறுவேன்.அதுவரை நான் செல்லமாட்டேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வழிநடத்துவதற்கு நான் தேவையா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நான் ஒரு வழக்கறிஞர்.என்னால் நீதிமன்றங்களில் பயிற்சி பெற முடியும். தேவைப்பட்டால் நான் செல்லவும் தயாராக இருக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அதன் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

குடும்ப குத்துவிளக்கு சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மீனாவா இது?.. High Heels, செம மாடர்ன் உடை என கலக்குறாரே.. Cineulagam
