அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கையின் தூதுவராக மகிந்த சமரசிங்க
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து புளத்சிங்கள தொகுதி அமைப்பாளர் ஒருவருக்கு அந்த நாடாளுமன்ற ஆசனம் வழங்கப்படவுள்ளது.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டு 9வது இடத்தை பெற்ற அந்த கட்சியின் புளத்சிங்கள தொகுதி அமைப்பாளர் லலித் வர்ணகுமாரவுக்கே நாடாளுமன்ற ஆசனம் வழங்கப்படவுள்ளது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரான தயாபர மஞ்சு என புளத்சிங்கள உட்பட களுத்துறையில் அழைக்கப்படும் லலித் வர்ணகுமார கடந்த பொதுத் தேர்தலில் 46 ஆயிரத்து361 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
லலித் வர்ணகுமார ஹொரண ஸ்ரீபாலி கல்லூரியின் பழைய மாணவராவார்.
மகிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
மகிந்த சமரசிங்க வெளிவிவகார அமைச்சராகவும் சில காலம் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam