நாடாளுமன்ற அமர்விற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்ட மகிந்த: விமானப்படையின் தகவல்

Sri Lanka Parliament Mahinda Rajapaksa Sri Lanka Politician Sri Lankan Peoples
By Aanadhi Aug 11, 2022 07:06 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஒருவழி பயணத்திற்கு மாத்திரம் எட்டு இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி, கடந்த மே மாதம் 9ம் திகதி மகிந்த ராஜபக்‌சவின் ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். 

மகிந்த ராஜபக்‌ச பதவி விலகல்

நாடாளுமன்ற அமர்விற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்ட மகிந்த: விமானப்படையின் தகவல் | Mahinda S Travel Day Parliamentary

இதனையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக மகிந்த ராஜபக்‌ச தனது பிரதமர் பதவியை விலகல் செய்து விட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருந்தார். 

நாடாளுமன்ற வருகை

இந்நிலையில் மே 18ம் திகதி அவர் நாடாளுமன்ற அமர்வின் போது சமூகமளித்திருந்தார்.

முன்னாள் பிரதமர் மகிந்த மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றம் வருகை (Video)

நாடாளுமன்ற அமர்விற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்ட மகிந்த: விமானப்படையின் தகவல் | Mahinda S Travel Day Parliamentary

விமானப்படை விமானங்கள் மூலம் அவர் திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதாக அப்போது தகவல்கள் பரவியிருந்தன.

மேலும் இது குறித்த ஊடகம் ஒன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விமானப்படையிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், கடந்த மே 18ம் திகதி மகிந்த ராஜபக்‌ச விமானப்படையின் வை-13 சிறிய ரக விமானம் மூலம் சீனக்குடாவில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானப்படை  தகவல்

அதற்காக 875 லீட்டர் எரிபொருள் செலவிடப்பட்டுள்ளதுடன், ஒருவழிப் பயணத்துக்கான மொத்த செலவு மட்டும் எட்டு லட்சம் ரூபா என்றும் தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற அமர்விற்காக கொழும்பிற்கு அழைத்துவரப்பட்ட மகிந்த: விமானப்படையின் தகவல் | Mahinda S Travel Day Parliamentary

அதனை மகிந்த ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் செலுத்தி விட்டதாகவும் விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் ரொஹான் வெலிவிவட்டவிடம் அது குறித்து வினவிய போது, தான் அந்தக் காலப்பகுதியில் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றவில்லை என்றும், மகிந்தவின் இளைய மகன் ரோகித ராஜபக்‌ச பதில் செயலாளராக பணியாற்றினார் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் மகிந்தவின் விமானப் பயணத்துக்கான செலவுத் தொகை அரசாங்க நிறுவனமொன்றினால் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US