மீண்டும் இலங்கை திரும்பும் கோட்டாபய: வேறு நாடுகளில் புகலிடம் கோருவதில் ஏற்பட்ட பெரும்சிக்கல்

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Singapore Thailand
By Sivaa Mayuri Aug 11, 2022 05:45 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிந்ததும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், அவர் இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு சுற்றுலா விசாவில் 90 நாட்கள் தங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, மனிதாபிமான அடிப்படையில் ராஜபக்ச தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று உறுதிப்படுத்தினார்.

மேலும் அது தற்காலிக தங்குமிடம் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை 

மீண்டும் இலங்கை திரும்பும் கோட்டாபய: வேறு நாடுகளில் புகலிடம் கோருவதில் ஏற்பட்ட பெரும்சிக்கல் | Gotabaya Rajapaksa Thailand Visa Sri Lanka

கோட்டாபய 3 மாதம் தங்குவதற்காக, இலங்கை அரசாங்கம், நேரடியாக தாய்லாந்தின் அனுமதியை கோரியிருந்தது.

இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்சவின் பயண செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டதாகவும், அவரையும் அவரது மனைவியையும் மாலைத்தீவுக்கு ஏற்றிச் சென்ற விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் தஞ்சம் கோரிய கோட்டாபய

வெளிநாடுகளில் முன்னாள் ஜனாதிபதியின் தங்குமிடத்திற்கு நிதியளிக்கும் பணக்கார வர்த்தகர்களும் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவிக்கு தாய்லாந்தில் எவ்வாறான தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது இன்னும் தெரியவில்லை.

இதேவேளை மத்திய கிழக்கில் கோட்டாபய ராஜபக்ச தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. 

கோட்டாபயவிற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல் 


மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US