மகிந்தவின் திடீர் போர் நிறுத்தம்:விசாரணை கோரும் பொன்சேகா

Colombo Mahinda Rajapaksa Namal Rajapaksa Sarath Fonseka Government Of Sri Lanka
By Rakesh Oct 08, 2025 09:32 AM GMT
Report

"பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலித் தலைவர்களைத் தப்பிக்க வைப்பதற்காக இறுதிக்கப்பட்டப் போரின்போது மகிந்த ராஜபக்சவால் 48 மணிநேர போர் நிறுத்தம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், 2005 ஆம் ஆண்டு புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டமை குறித்தும் விசாரணை அவசியம். இதற்காக ஜனாதிபதி விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "இராணுவத்தினர் தொடர்பில் ராஜபக்சர்கள் தற்போது அதிக அக்கறையுடன் கதைக்கின்றனர்.

என்னை மகிந்த ராஜபக்ச சிறை வைத்ததுகூட தவறு என நாமல் ராஜபக்ச கூறி வருகின்றார். பிரபாகரன் கூட எமது குடும்பத்தினரை இலக்கு வைக்கவில்லை. நாம் உக்கிர போரில் ஈடுபட்டிருந்த தருணத்தில்கூட படையினரின் குடும்பத்தைப் பிரபாகரன் இலக்கு வைக்கவில்லை.

ஆனால், ராஜபக்சர்கள் எனது குடும்பத்தினரைக்கூட விட்டுவைக்கவில்லை. எனக்குக் கீழ் வேலை செய்த படையினர் ஓய்வூதியம் இன்றி வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியே சென்ற பிறகுகூட அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இடமளிக்கப்படவில்லை. தடையேற்படுத்தப்பட்டது. இதனால் சிலர் மாரடைப்பு வந்து மரணித்துவிட்டனர். இப்படி செய்த ராஜபக்சர்கள் தான் தற்போது படையினருக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்

மகிந்தவின் திடீர் போர் நிறுத்தம்:விசாரணை கோரும் பொன்சேகா | Mahinda S Sudden Ceasefire Fonseka Demands Inquiry

போர் நிறுத்தம் வழங்குமாறு அழுத்தம்

2009 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 1 வரை 48 மணிநேரம் போர் நிறுத்தம் வழங்குமாறு மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுத்தார். அந்தக் காலப் பகுதியில் நாம் முல்லைத்தீவை பிடித்துவிட்டோம். புதுகுடியிருப்பையும் மும்முனையில் சுற்றிவளைத்துவிட்டோம். இன்னும் 10 கிலோ மீற்றர் வரை தான் பிடிக்க வேண்டி இருந்தது. இதற்காகத்தான் இரண்டரை வருட காலம் போர் நடந்தது.

4 ஆயிரத்து 500 வரையான படையினரை இழந்திருந்தோம். அந்தப் போர் நிறுத்தத்தை மஹிந்த ராஜபக்ச வழங்கி இருக்காவிட்டால் 2009 மார்ச் நடுப் பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருப்போம். போர் நிறுத்தம் வழங்கப்பட்ட பிறகு புலிகள் எம்மைத் திருப்பித்தாக்கினர்.

நாம் ஆயுதங்களை கீழே வைத்திருந்தோம். ஐந்து கிலோ மீற்றர் வரை பின்னால் வரவேண்டி ஏற்பட்டது. பெருமளவு ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.

மகிந்தவின் திடீர் போர் நிறுத்தம்:விசாரணை கோரும் பொன்சேகா | Mahinda S Sudden Ceasefire Fonseka Demands Inquiry

500 வரையான படையினரை இழந்தோம். எதற்காகப் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது? பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களைத் தப்பிக்கவைப்பதற்காகவே இது நடந்திருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மைத் தாக்கலாம் என பிரபாகரன் சிந்தித்துத் தாக்குதல் நடத்தினார். அவர் வாய்ப்பைத் தவற விட்டிருந்தார்.

போர் முடிவடையப் போகின்றது எனத் தெரிந்தும் எதற்காக போர் நிறுத்தம் வழங்கப்பட்டது? மகிந்தவின் இந்தத் தேசத்துரோக செயல் தொடர்பில் இந்த அரசுக்கு முதுகெலும்பிருந்தால் நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும்.

2005 ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகள் ரணிலுக்கு விழுவதைத் தடுக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளுக்கு மகிந்த தரப்பு பணம் வழங்கியது. அந்தப் பணத்தை வைத்தே கடற்புலிகளுக்குக் கப்பல் கொள்வனவு செய்யப்பட்டது. புலிகளுக்குப் பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் பசில் ராஜபக்சவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.

எனவே, இது பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது உயர்மட்டக் குழுவொன்றை அமைத்தேனும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

"தங்காலை - கால்டன் இல்லத்தில் வெறும் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளை வைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு - விஜேராம இல்லத்திலும், ஜனாதிபதி மாளிகையிலும் பயன்படுத்திய தளபாடங்கள் மிகப் பெறுமதி மிக்கவை. அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்திடம் சாட்சியமளிக்க தயார்! ஜெனிவாவில் சிறீதரன் பகிரங்கம்

அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்திடம் சாட்சியமளிக்க தயார்! ஜெனிவாவில் சிறீதரன் பகிரங்கம்

நான் ஜனாதிபதியாகியிருந்தால் முதலில் அதற்காக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பேன்.

நாட்டில் ஊழல்களை ராஜபக்ச குடும்பமே நிர்வகிக்கின்றது. ஊழல், மோசடிகள் வரையறைகளைத் தகர்த்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் சிறைகளில் அடைத்தாலும் இவர்கள் ஊழல்களைக் கைவிட மாட்டார்கள் என்றும் 

நான் ஜனாதிபதியாகியிருந்தால் முதலில் அதற்காக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பேன். 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்ய முடியும். அவர்கள் மீது பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், விஜேராம மாவத்தையிலுள்ள அந்தப் பொருட்களை எவ்வாறு கொள்ளையிடுவது என்பதே மகிந்தவின் சிந்தனையாகவுள்ளது.

எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஊழலை ஒழிப்பதாகப் பெருமிதம் கொண்டாலும், மகிந்த ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவர்கள் நாட்டை மேம்படுத்தியதாக ஏற்றுக்கொள்ள முடியாது.இவர்கள் நாட்டுக்குச் சேவையாற்றியதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அன்றைய தினத்தில்தான் இந்த அரசு மக்களுக்காகச் செயற்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வோம். எமக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் உண்மையைக் கூற நாம் அச்சப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணம் செலுத்த அனுமதி

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணம் செலுத்த அனுமதி

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US