அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள அபசகுணம் - உண்மையை வெளிப்படுத்திய மஹிந்த
சமகால அரசாங்கத்திற்குள் முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளமையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுகதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், அரசாங்கத்தை விட்டு செல்லவது தொடர்பில் உத்தியோகபூர்வமான எவ்வித அறிவிப்புகளும் விடுக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக நாடாகும். அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அரசாங்கத்தில் இணைந்த சிறிய கட்சிகளுக்குள்ளும் இவ்வாறான சிறிய கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதென அவர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து சிறிய கட்சியினருடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை சிலர் அபசகுணமாக பார்க்கின்றார்.
சுதந்திர கட்சியின் சிலர் அரசாங்கத்தை விமர்சித்த போதிலும் அவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ளபோவதில்லை என தான் நம்பவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri