மகிந்தவிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு சென்ற அவசர செய்தி! நாமலுக்காக கதை கூறும் மகிந்த
போர் தொடர்பில் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார்.
இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பில் அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பேச்சு வார்த்தை
சமாதான பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவே தாம் விரும்பியதாகவும் இது தொடர்பிலான செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாம் பரிமாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து பேச்சு வார்த்தை நடத்த தயார் என்ற செய்தியை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு எனினும் தம்மை ஒரு தடவையேனும் தாக்கினால் போரை முடித்து விடுவதாக தாம் தீர்மானித்திருந்ததாக மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகள் ஒரு தடவை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து யுத்தம் முடிவடையும் வரையில் தாக்கி அழித்ததாக அவர் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வரும்போது அவமானங்களை தாங்கிக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்
மக்கள் ஆத்திரப்படும்போது சில விடயங்களை சொன்னாலும் அவர்கள் பின்னர் அந்த மனநிலையில் இருந்து மாறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தம்மை தவிர வேறு எந்த தலைப்பும் மேடைகளில் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

தாமும் தமது குடும்பத்தினரும் பெருந்தொகை சொத்துக்களை சூறையாடியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என தெரிவித்துள்ளார்.
நம்மிடம் பெரும் தொகையை பணம் இருக்கின்றது என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உகண்டா குமாரி எனப்படும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சியே பதில் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போது அவை பொய்யென்பதனை நிரூபிப்பதற்காக சிரத்தை எடுத்துக் கொள்ளத் தவறியதாக தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழு
போர் முடிவுக்குக் கொண்டு வரும் போது இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாம் சரியான முறையில் கையாண்டதாக அவர் கூறியுள்ளார்.
ஜேவிபி கட்சியின் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தாம், ஓா் இளம் சட்டத்தரணி என்ற வகையில் அவர்களுக்காக குரல் கொடுத்து பலரது உயிர்களை காப்பாற்ற முயற்சித்ததாக மகிந்த தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச பாதாள உலகக் குழு செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் பியர், சிகரட் கூட அருந்த மாட்டார் அவரை பாதாள உலகக் குழுவில் சேர்ப்பது அந்தக் குழுக்களுக்கே வெட்கம் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |