மகிந்தவை கைது செய்யுமாறு வெளிநாட்டு பெண் ஒருவர் கோரிக்கை
பதவி விலகிய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரி வெளிநாட்டு பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள குறித்த பெண் காலியில் இன்று தனி ஒருவராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதுடன், மகிந்தவும் பதவி விலகி உள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபயவும் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில் மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் குறித்த வெளிநாட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். “Arrest Mahinda” என்ற வாசகம் அடங்கிய பாதாதையுடன் அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.





உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
