மகிந்த விடுத்துள்ள கோரிக்கை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் விலகிச் சென்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சியுடன் இணையுமாறு கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அரகல போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக இளம் தலைவர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது கட்சி வெல்லப் போகிறது என்பதை சந்தோஷமாக தெரிவித்துக் கொள்வதாக மகிந்த தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் அழைப்பு
இளம் தலைவரான நாமல் ராஜபக்சவுடன் இணைந்து இளம் தலைமுறையினர் செயலாற்ற முடியும் என மகிந்த தெரிவித்துள்ளார்.
கடும் இழுபறிக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச இன்று அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நாமலின் வெற்றியை உறுதிப்படுத்தும் தீவிர முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
