மகிந்த ராஜபக்சவிற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, கோட்டை நீதவான் மன்றம் வெளிநாடு செல்ல இன்று (11.01.2023) அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
காலி முகத்திடல் தாக்குதல்
கடந்த வருடம் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மகிந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவரது சட்டத்தரணியினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
10 நாட்களுக்கு அனுமதி
அதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கோட்டை நீதவான் திலின கமகே வழங்கியுள்ளார்.
இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இதற்கமைய அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்து, விசாரணையை மார்ச் 28ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 47 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
