தேசியத் தேர்தல் தொடர்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்- செய்திகளின் தொகுப்பு(Video)
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
மார்ச் மாதத்திற்கு பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மகிந்த ராஜபக்ச தனது செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதனால், கிராம மட்டத்திலிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் மாவட்ட, தொகுதி மட்டக் கூட்டங்களிலும் தானும் பங்கேற்கவுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,



