மகிந்தவின் மிஹின் லங்காவால் இரு வங்கிகளுக்கு ஏற்பட்ட நிலை
மகிந்த ராஜபக்சவின் முதல் ஜனாதிபதி பதவிக் காலத்தில் நிறுவப்பட்ட மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் மூடப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நிறுவனத்தின் பாரிய கடன் இன்றுவரை பாரிய சுமையாகியுள்ளது.
நவம்பர் 07 ஆம் திகதி வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தொடர்ந்து வெளியிடப்பட்ட பொருளாதார மற்றும் நிதி நிலைமை குறித்த அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்
திறைசேரி வங்கிகளுக்கு வழங்கி பிணை கடன் பதிவேட்டில் கடனுக்கான தரவு சேர்க்கப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் பெயரில் இலங்கை வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிணை கடன்களில் ரூ. 3,162.23 மில்லியன் மற்றும் மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட ரூ. 3,063.15 மில்லியன் கடன் நிலுவையில் உள்ளது.

அரசுக்கு சொந்தமான இரண்டு வணிக வங்கிகளுக்கும் ரூ. 6,225.38 மில்லியன் கடன் சுமையை மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் சுமத்தியுள்ளது.
மிகவும் தன்னிச்சையான முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய பல திட்டங்களில் ஒன்றாக மிஹின் லங்கா நிறுவனம் நிறுவப்பட்டதாகும். மேலும் அந்தக் கடன் இன்னும் செலுத்தப்படவில்லை.