மீண்டும் எழுந்திருக்க வேண்டாம் மகிந்தவிடம் வணங்கி கேட்கும் சம்பிக்க ரணவக்க
மீண்டும் எழுந்திருக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வணங்கி கேட்டுக்கொள்வதாகவும் பல வருடங்கள் கஷ்டப்பட்டு மக்கள் உருவாக்கியுள்ள மிகப் பெரிய சமூக மூலதனம் மகிந்த எழுந்திருக்கும் அனைத்து சந்தர்ப்பங்களில் நாட்டை விட்டு செல்வதாகவும் 43 வது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற 43 வது படையணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார.
பைத்தியகாரத்தனத்தை பார்த்து மக்களுக்கு கசந்து போயுள்ளது
மகிந்தவுடன் மீண்டும் எழுவோம் என்ற பைத்தியகாரத்தனத்தை பார்த்து மக்களுக்கு கசந்து போயுள்ளது. இதனால், தயவு செய்து எழுந்திருக்க முயற்சிக்க வேண்டாம். நீங்கள் ஒதுங்கி இருக்கும் அளவுக்கு நாட்டுக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது.
மக்களுக்கு இது புரியும் போது, ஏன் பழைய சக்கரம் மீண்டும் சுழல்கிறது. பசில் மீண்டும் வருகிறார். கோட்டாபய மீண்டும் வருகிறார். இவற்றில் மாற்றம் ஏற்பாடது என்ற மனநிலை ஏற்பட்டால், என்ன நடக்கும்?.
விவசாயிகள் தப்பியோடியது போல், உழைக்கும் மக்கள் வீதிக்கு சென்றது போல், ஏதேனும் ஒன்றை செய்யக்கூடிய வசதிகளை கொண்டவர்களும் நாட்டை விட்டு சென்றால், நாட்டில் எதுவும் மீதமிருக்காது.
பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு தற்போது பொறுப்பொன்று உள்ளது. நிதியமைச்சு பொருளாதார அடிப்படைவாதத்தில் இருக்கின்றது. ஒரு பக்கம் குறித்து மட்டுமே சிந்திக்கின்றது.
உண்மையில் வறிய நிலையில் இருப்போரை கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும்
நிதி பிரச்சினை இருக்கின்றது. வரிகளை அதிகரிக்கும் போது தொழில் துறைகள், வர்த்தகங்கள், தொழில் நிபுணர்களுக்கு என்னவாகும் என்பதை ஆராய்வதில்லை. சமூக கருத்து கணிப்பை நடத்தி அதற்கு அமைய செயற்பட வேண்டும்.
நாட்டில் வறிய நிலையிலும் பட்டினியில் இருப்போருக்கு நிவாரணத்தை வழங்க வேண்டியது அவசியம். மொட்டு, யானை, மணி போன்ற கட்சி சின்னங்களை பார்த்து சமூர்த்தி வழங்கியது போன்ற முறைகள் தற்போது நாட்டுக்கு சரிப்பட்டு வராதது.
உண்மையில் வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.