சந்திரிகா அரசாங்கத்தின் தகவல்களை ஊடகங்களுக்கு பகிர்ந்தமையை மஹிந்த ஏற்றுக்கொண்டார்
சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தாம், ஊடகங்களுக்கு தகவல்களை பகிர்ந்தமையை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
தாம், அரசாங்க கூட்டங்களில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருந்தமையால், தம்மை அரசாங்கத்தில் இருக்கும் செய்தியாளர் என்று அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா கூறுவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்த நிகழ்வின்போது மஹிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாம் செய்தி ஆசிரியராக செயற்பட்டு, தகவல்களைத் திருத்திய பின்னரே அவற்றை ஊடகங்களுக்கு பகிர்ந்ததாகவும், அது தனக்கும் அல்லது ஆளும் கட்சிக்கும் தீங்கு விளைவிக்காததை தாம் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊடகங்கள் தாக்கப்பட்டபோது தமது அரசாங்கம் ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இன்றைய நிகழ்வில் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும, அரசாங்கம் ஊடகங்களை ஸ்திரப்படுத்தும்போதே ஊடகங்கள் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்



மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
