மகிந்தவுக்கு எதிராக களமிறங்கிய சட்டத்தரணிகள் (Photos)
மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டங்களை வகுத்துக்கொடுத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
தாக்குதல்களை நடத்துவதற்கு இலங்கை காவல்துறை அனுமதி வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் உதவியதாகவும் சட்டத்தரணி வன்னிநாயக்க தெரிவித்தார்.

அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam