மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டை மகிந்த ராஜபக்ச, 1980ஆம் ஆண்டு வாங்கியதாக உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,
“முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு, விஜேராம மாவத்தை, எண். 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள்.
செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும். அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை.
கொழும்பில் வாங்கிய முதல் வீடு
ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை நான் கவனித்தேன். 1980 ஆம் ஆண்டு மிரிஹான, கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதை மஹிந்த அண்ணன் நினைவு கூர்ந்தார்.
அங்கிருந்து தான் நான் நாளந்தா கல்லூரிக்குச் சென்றேன். பின்னர், ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாடு சென்றேன். அந்த வீடு மிகவும் அதிர்ஷ்டமான வீடு என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். அந்த வீட்டிற்கு வந்த பிறகு மஹிந்த அண்ணன் திருமணம் செய்து கொண்டார்.
அதேபோல், டட்லி அண்ணன், பிரீத்தி அக்கா, கந்தானி அக்கா, கோட்டா அண்ணன் ஆகியோர் அந்த வீட்டிற்கு வந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில், ஜெயந்தி அக்கா மற்றும் பசில் அண்ணனும் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள காணியில் தங்கள் முதல் வீட்டை கட்ட முடிவு செய்தனர்.
அதனால்தான் எனது முதல் வீடும் 1991இல் மிரிஹான பொலிஸ் பிரிவில் கட்டப்பட்டது. அரசாங்க உத்தியோகபூர்வ குடியிருப்புகள் இல்லாத நேரத்தில் மெதமுலனவில் இருந்து கொழும்புக்கு வந்து ஒரு வீட்டை வாங்கிய எங்கள் அண்ணன் மகிந்த, இன்று முன்னாள் ஜனாதிபதியாக தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க கொழும்பில் வீட்டுவசதிப் பிரச்சினை இருக்காது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



