மகிந்த - கோட்டாபய சகாக்களுடன் அநுர தரப்பு பேச்சுவார்த்தை
மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் சாடியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தரப்பினர் ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற நிதி சட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு மாநகர சபை
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பெருமளவிலான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
எமது கட்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்த உயரிய சபை ஊடாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியமைப்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியை போன்று பேசுகிறது. கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகளை இணைத்துக் கொள்ள போவதில்லை என்ற தரப்பினர் தற்போது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் குளறுபடியானதாக காணப்படுகிறது.
இதற்கு தேர்தல் முறைமை பிரதான காரணமாகும். இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்திய போதும் அரசாங்கம் அதனை கவனத்திற்கொள்ளவில்லை” என்றார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
