தென்கொரியா பறக்கின்றார் மகிந்த: 10 நாட்களுக்கு பயணத் தடை நீக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை 10 நாட்களுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இன்று (08.03.2023) இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் 30 ஆம் திகதி வரையில் மகிந்த ராஜபக்சவுக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு காலிமுகத்திடல் மைதானத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட போதே கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை
மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக தனது சேவை பெறுநரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தென்கொரியாவுக்குச் செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத் தடையை
நீக்குமாறு அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை
விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையைக் கருத்தில் கொண்ட கோட்டை நீதிவான் மகிந்த ராஜபக்சவுக்கு
விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை 10 நாட்களுக்கு நீக்கியுள்ளது.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan