மகிந்தவின் நாயை காணவில்லை - வீட்டுக்கு அருகில் சிக்கிய யுவதி
வீரகெட்டிய, கார்ல்டன் தோட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அங்கிருந்த நாய்க்குட்டி காணாமல் போயுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டின் முன் இருந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்ததாக அந்த யுவதி கூறிய போதிலும் கார்ல்டன் தோட்ட பாதுகாப்பு அதிகாரிகள் யுவதியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தோட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அந்த யுவதி அங்கிருந்த நாய்க்குட்டியை எடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
