மஹிந்தவுக்கு நெருக்கமான பெண் ஒருவரி்ன் மோசடி அம்பலம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக பணியகத்தில் உள்ள செயலாளர் ஒருவரின் மனைவிக்கு முறையற்ற வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கையில் ஆராய்ச்சி நிறுவனமொன்றின் தலைவராக குறித்த பெண் நியமிக்கப்பட்டுள்ளர். அவர் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே அங்கு பணிக்கு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
தலைவரின் நியமனம் கடந்த மாதம் துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய பெண் சாதாரண தர பரீட்சையில் கூட சித்தியடையவில்லை என அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும், அவரின் கீழ் 12 முதுநிலை பட்டதாரி அதிகாரிகள் பணிபுரிவதாக மேற்கண்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆய்வு தொடர்பில் எந்தவித அறிவும் இல்லாத இந்த தவிசாளருக்கான ஒரே தகுதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழியர்களின் செயலாளரின் மனைவியாக இருப்பது மட்டுமே எனவும் அரசாங்கப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளர்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 14 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
