சுமந்திரனின் தாயாருக்கு மகிந்த ராஜபக்ச அஞ்சலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் நேற்று (27.02.2024) சுமந்திரனின் தாயாரான 85 வயதுடைய புஷ்பராணி மதியாபரணன் காலமானார்.
முதுகுத்தண்டு சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த இரண்டு வருட காலமாக சுகயீனமாக இருந்த அவர், உலகை விட்டுப் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு தரப்பினரும் இரங்கல்
இந்நிலையில், தெஹிவளையில் அமைந்துள்ள சுமந்திரனின் வீட்டிற்கு இன்று சென்ற மகிந்த ராஜபக்ச சுமந்திரனின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை, சுமந்திரனின் தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சுமந்திரனின் தந்தை யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் தாயார் குடத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர் News Lankasri
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam