மீண்டும் பிரதமராகும் மஹிந்த! பதவியை ஒப்படைக்க தயாராகும் தினேஷ்
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதற்கமைய, பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், அவர் ஏற்கனவே பிரதமர் பதவிக்கான சிறப்புரிமைகளை மிகவும் குறைவாகவே அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்பதே அதற்குக் காரணமாகும்.
இன்னொரு தரப்பினர், மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri
