தேசிய அரசாங்கம் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்பட்டதா..! அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ள விடயம்
தேசிய அரசாங்கம் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியோ, அமைச்சரவையோ இது வரையில் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டம்
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டமிருந்திருந்தால் ஜனாதிபதி அது குறித்து அமைச்சரவையில் கருத்து கோரியிருப்பார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் மட்டும் ஆதரவளிக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
