அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்: வெகுவிரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமூகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் எதிர்வு கூறியுள்ளார்கள், இச்சவாலை வெற்றிகொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்துறை பாதிப்பு
அவற்றை விரைவாக செயற்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு காரணிகளினால் தேசிய விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
அரச காரியாலயங்களை சூழவுள்ள காணிகளில் மேலதிக பயிர்ச்செய்கையில் ஈடுப்படுமாறு சகல அரச ஊழியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் மத்தியில் எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை! பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தகவல் |
அத்துடன் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள விசாலமான அரச மற்றும் தனியார் காணிகளில் தற்காலிகமாக மேலதிக பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு
அரச சேவையாளர்கள் 5 நாட்களும் சேவைக்கு சமூகமளிப்பது அவசியமற்றது என விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அரச ஊழியர்கள் மேலதிகமாக உள்ள நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு தட்டுப்பாட்டு சவாலை வெற்றிக்கொள்ள முடியும். பொது மக்கள் இயலுமான அளவு தமக்கு தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான உண்மைத் தகவல்! பிரதமர் அலுவலகம் அறிவிப்பு |

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
