அரச ஊழியர்கள் மத்தியில் எடுக்கப்படவுள்ள முக்கிய நடவடிக்கை! பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தகவல்
இலங்கையின் அரச சேவையை இலத்திரனியல் அரச சேவையாக மாற்றி அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராகப் பதவியேற்றுள்ள பிரியந்த மாயாதுன்னே இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இலத்திரனியல்மயத்திற்கான காரணம்
கடதாசி தாள் பாவனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தின் சேவைகளை இலத்திரனியல் மயப்படுத்துவது அத்தியாவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், அத்தியாசியமில்லாத நாட்களில் அரச ஊழியர்கள் சீருடைகள் இன்றி விரும்பிய உடையணிந்து வரும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டினியை எதிர்கொள்ள தயார்படுத்தல்
அத்துடன் வீட்டுத் தோட்டங்களில் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்பட்டு எதிர்வரக் கூடிய பஞ்சம் மற்றும் பட்டினி என்பவற்றை எதிர்கொள்ள மக்களை தயார்படுத்தும் செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாகவும், பட்டதாரி உத்தியோகத்தர்களை இந்தச் செயற்பாட்டின் போது பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri