அதிகாரிகள் பரிந்துரை செய்தால் நாட்டை முடக்கும் தீர்மானத்தை அமுல்படுத்த முடியும் - மஹிந்த அமரவீர
நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமென அதிகாரிகள் பரிந்துரை செய்தால் அதனை அமுல்படுத்த முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்குமாறு பலர் கோரி வருகின்ற போதிலும் கடந்த காலங்களில் நாடு முழுமையாக முடக்கப்பட்ட போது ஏற்பட்ட அசௌகரியங்களை நினைத்துப் பார்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்கினால் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்றட்டால் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் முழு அளவிலான முடக்க நிலைமை அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை முடக்குவது மிகவும் இலகுவானது என்ற போதிலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானது என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan