மகிந்தவுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டு சிரிக்கும் சர்வதேசம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இழைப்பட்ட அநீதியை பார்த்து உலக நாடுகள் சிரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து தங்காலை கார்ல்டன் வீட்டுக்கு செல்ல முன்னர் மகிந்தவை சந்தித்து கலந்துரையாடி பின்னர் ஊடகங்களுக்கு இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச் நேற்று கொழும்பு, விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
அரசியல் செயற்பாடு
அதற்கமைய, அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று காலை மகிந்த ராஜபக்ஷவைச் சந்திக்க விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது மகிந்தவின் அடுத்தகட்ட அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக இதன்போது அரசியல்வாதிகள் உறுதி வழங்கியுள்ளனர்.
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam