ஊழல் வழக்கில் சிக்கிய மகேஷி விஜேரத்னவின் மகள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகேஷி விஜேரத்னவின் மகள், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பு தாம் குற்றமற்றவர் என வாதிட்டுள்ளதாக தெரிவி்க்கப்படுகின்றது.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி, அவர்களை கடமைகளை செய்ய தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் நேற்று(06.01.2026) தமது வாதத்தை முன்வைத்துள்ளார்.
வழக்கு ஒத்திவைப்பு
ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களை அரச கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த ஊழல் வழக்கில் மகேஷி விஜேரத்ன மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையின் போதே, மஹேசியின் மகள், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தியதாகவும், அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேக நபர் குற்றமற்றவர் என்று கூறியதால், தலைமை நீதிவான் வழக்கை விசாரணைக்கு ஒத்திவைத்து, சாட்சிகளை எதிர்வரும் மே 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri