பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்பும் விளக்கமறியலுக்குச் சென்ற மகேஷ் கம்மன்பில
தரம் குறைந்த உர இறக்குமதி மோசடி சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகேஷ் கம்மன்பிலவுக்கு பிணை கிடைத்த நிலையிலும் மீண்டும் விளக்கமறியலுக்கு சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த உரம் காரணமாக அரசாங்கத்துக்கு 6.9 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்தது.
வெளிநாடு செல்ல தடை
இந்தச் சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் அப்போதைய கமத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளரும், தற்போதைய ஊவா மாகாண பிரதம செயலாளருமான மகேஷ் கம்மன்பில அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மகேஷ் கம்மன்பிலவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதவான் தனூஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப்பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மகேஷ் கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதன் காரணமாக மகேஷ் கம்மன்பில, சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீண்டும் விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் News Lankasri
