மஹவ- யாழ்ப்பாணம் வரையான புகையிரத போக்குவரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்
மஹவ முதல் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத போக்குவரத்து ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த புகையிரத பாதையை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதன்படி 2023 ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புகையிரத பாதை

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
புகையிரத போக்குவரத்து முழுவதும் தொடர்வதாகவும் எனினும் புகையிரத பாதை பாழடைந்துள்ளதாகவும் பயணத்தை தொடர்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5 மாதங்களுக்குள் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam