மகாத்மா காந்தியின் 77 ஆவது நினைவு தினம்
மகாத்மா காந்தியின் 77 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று (30.01.2024) ) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
மலர் அஞ்சலி
இதற்கமைய மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் சிலைக்கு மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தினால் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர், காந்தி சேவா நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri