உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் இரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாள் பரீட்சைக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திகதி
உயர்தர விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக வெளியான நிலையில், வினாத்தாளை முழுமையாக இரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய, குறித்த பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், முதல் பகுதி பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |